டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது..!

Estimated read time 1 min read

பழைய டெல்லியின் சாவடி பஜார் பகுதியில் வியாழக்கிழமை காலை கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சோக சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதற்கட்ட தகவல்களின்படி, சாவடி பஜார் மெட்ரோ நிலையம் அருகில் உள்ள ‘கலி சிதாரா’ பகுதியில் காலை 9:50 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. தகவல் அறிந்தவுடன், வாட்டர் டெண்டர்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் உட்பட குறைந்தது 6 தீயணைப்புப் படை பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளில், இரண்டு கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய சந்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து இடிபாடுகள் குவிந்து கிடப்பது தெரிகிறது. பழைய டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க குறுகிய சந்து பகுதிகள் என்பதால், மீட்புக் குழுவினர் அங்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. விபத்து நடந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழிவிடும் வகையில் தங்கள் வாகனங்களை அப்புறப்படுத்தும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு டெல்லியின் மிலன் கார்டன் பகுதியில் பழைய வீட்டின் மீது புதிய தளம் கட்டும் போது மேற்கூரை இடிந்து விழுந்து சந்தர்பால் (60) மற்றும் விஜய் குமார் (33) ஆகிய 2 பேர் உயிரிழந்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக அக்டோபர் 7 அன்று சீமாபுரி பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

தொடர் கட்டிட விபத்துக்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் சௌரப் பரத்வாஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டெல்லி மாநகராட்சி (MCD) மீது குற்றம்சாட்டிய அவர், “சத்ய நிகேதன் பகுதியில் கட்டிட விபத்து நடந்த பிறகு பல கட்ட பாதுகாப்பு தணிக்கைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அப்படியிருந்தும் டெல்லியில் தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author