சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குறைந்தது 265 பேர் உயிரழந்தனர்.
வியாழக்கிழமை பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர மற்றவர்கள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்திற்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் விழுந்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடவும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் சிவில் மருத்துவமனைக்குச் செல்லவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் வர உள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்து; சம்பவ இடத்திற்கு இன்று விரைகிறார் பிரதமர் மோடி
