கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, கனேடிய பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.
கனடா பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தான் பங்கேற்பதை உறுதிப்படுத்தினார்.
இது குறித்து X இல் ஒரு பதிவில், பிரதமர் மோடி,”கனடா பிரதமர் மார்க் ஜே கார்னியிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. அவரது சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன், மேலும் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தேன்” என்று கூறினார்.
“உச்சிமாநாட்டில் எங்கள் சந்திப்பை எதிர்நோக்குகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
கனடா பிரதமரிடமிருந்து ஜி7 உச்சி மாநாட்டிற்கான அழைப்பைப் பெற்றார் பிரதமர் மோடி
