லான்சாங்-மெகோங் ஒத்துழைப்புக்கான 11ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, தாய்லாந்து துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சிஹாசக் ஆகிய இருவரும் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
இதில் வாங்யீ கூறுகையில், லான்சாங்-மெகோங் ஒத்துழைப்பானது உயிராற்றலும் வாய்ப்புகளும் கொண்ட பிராந்திய ஒத்துழைப்புக்கான பொன் மாதிரியாகத் திகழ்கிறது என்றார். மேலும், தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பல்வேறு அறைகூவல்களைச் சமாளித்து, தொடர்புடைய நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தரப்பினர்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு கடந்த 10 ஆண்டுகளில், லான்சாங்-மெகோங் ஒத்துழைப்பு பெற்றுள்ள ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களையும் வெகுவாக மதிப்பிட்டனர். மேலும், அடுத்த காலகட்டத்தில், இவ்வமைப்பின் பணிகளுக்கான சீனாவின் ஆலோசனைகளுக்கும் அவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
