140ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 4ம் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் நிறைவடைந்தது. இப்பொருட்காட்சியில் உலகளவில் 219 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3.52 இலட்சம் வெளிநாட்டு வணிகர்கள் பங்கெடுத்தனர். இது, கடந்த பொருட்காட்சியை விட 12.2 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது.
நடப்பு பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 48.8 இலட்சம் பொருட்களில் புதிய மற்றும் பசுமையான பொருட்களின் விகிதம், முறையே 23.2 விழுக்காடு மற்றும் 26 விழுக்காட்டினை வகித்து, மிக அதிக பதிவைச் செய்தது. தற்சார்பு அறிவுசார் சொத்துரிமை கொண்ட பொருட்களின் பங்கானது 26 விழுக்காடு வகித்தது. 141ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி, 2027ம் ஆண்டின் ஏப்ரல் 15ம் நாள் முதல், மே 5ம் நாள் வரை குவாங்சோ நகரில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் VCG
