சீனாவின் தைவான் குறித்து, ஜப்பானின் தலைமை அமைச்சர் தகைச்சி சனேவின் தவறான கூற்றுக்கு சர்வதேச சமூகம், கடும் கண்டனம் தெரிவித்தது. சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி யன் நிறுவனம், உலகளாவிய இணைய வ கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
ஜப்பான் நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது குற்றங்கள் குறித்து சுய மதிப்பீடு செய்து, சீனாவின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று 91.1 விழுக்காட்டு கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். 2ஆம் உலக போருக்கு பின்னர் உருவாகிய சர்வதேச ஒழுங்கிற்கு அறைகூவல் விடுத்துள்ள ஜப்பான் மீது 88.5 விழுக்காட்டினர் குற்றஞ்சாட்டினர்.
சீன நடுவன் அரசு, சீனாவின் ஒரே ஒரு அரசு ஆகும். தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும் என்று ஐ.நாவின் 2758ஆவது தீர்மானத்தில் நியமிக்கப்பட்டது. ஜப்பான் இந்த தீர்மானத்துக்கு மதிப்பு அளித்து, தைவான் பிரிவினைவாத சக்திக்கு தவறான தகவல்களை அனுப்ப கூடாது என்று 86.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
