சீனாவில் இவ்வாண்டின் முற்பாதியில் மின்சார நுகர்வு 5.3 % அதிகரிப்பு

சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் ஜூலை 15ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 6 திங்கள் காலத்தில், சீனாவில் முழுச் சமூகத்தின் மின்சார நுகர்வு 5 இலட்சத்து 9 ஆயிரத்து 990 கோடி கிலோவாட்டை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

 முதன்மைத் தொழில், இரண்டாம் நிலைத் தொழில் மற்றும் மூன்றாம் நிலைத் தொழிலின் மின்னாற்றல் நுகர்வு, 2025ஆம் ஆண்டை விட முறையே 4.9, 5.1 மற்றும் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் முற்பாதியில், மின்சார சார்ஜ் மற்றும் மாற்றச் சேவை, இணைய தரவுச் சேவை ஆகியவற்றின் மின்சார நுகர்வு முறையே 8100 கோடி கிலோவாட்டாகவும், 4940 கோடி கிலோவாட்டாகவும் ஆகும். இவற்றின் அதிகரிப்பு விகிதம் 56.9 விழுக்காடகவும் 44 விழுக்காடாகவும் உள்ளது.

முழு சமூகத்தின் மின்சார நுகர்வு, தேசியப் பொருளாதாரத்திற்கான அளவுகோலாகும். இவ்வாண்டின் முற்பாதியில் சீனப் பொருளாதாரம் நிர்பந்தத்தைச் சமாளித்து ஒட்டுமொத்த அளவில் நிதானமாகவும் சீராகவும் இயங்கும் முன்னேற்றப் போக்கினை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author