2026ஆம் ஆண்டு சீன சர்வதேச சேவைகள் வர்த்தகக் கண்காட்சி 9 முதல் 13ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. கௌரவ விருந்தினர் நாடான சீனாவிற்கான நார்வே தூதரகத்தின் வணிக ஆலோசகர் கூறுகையில், சீனாவின் சேவை வர்த்தகம் மேம்பட்டு வருவதால், உள்நாட்டு சேவைக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், இது நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
தற்போது சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்பின் மறுசீரமைப்பு செயல்முறை விரைவுபடுத்தப்பட்டு வருவதோடு, சேவை வர்த்தகம் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக மாறி வருகிறது. இக்கண்காட்சியில் பலமுறையாக பங்கேற்ற ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் கிரேட்டர் சீனா பிரதேசத்தின் பொது மேலாளர் கூறுகையில், தற்போது உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பிற்கான சிறந்த தளத்தை இக்கண்காட்சி பல்வேறு நாடுகளுக்கு வழங்கி, பரஸ்பர நன்மையையும் கூட்டு வெற்றியையும் ஊக்குவித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
சீனச் சேவைகளுக்கான முன்மாதிரி கண்காட்சிப் பகுதியை நடப்பு கண்காட்சி முதன்முறையாக அமைத்து, உள்நாட்டு வலுவான புத்தாக்கத் திறனை வெளிப்படுத்தி, சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்களை உருவாக்கவும், புத்தாக்க வளர்ச்சியை நனவாக்கவும் புதிய அற்றலை வழங்கியுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில், சீனா சேவை துறையை மையமாக கொண்டு, சந்தை நுழைவையும் திறப்பையும் விரிவுபடுத்தும். மேலும், நடப்பு கண்காட்சியின் மூலம், திறந்த ஒத்துழைப்புக்கான மேலதிக வாய்ப்புகளையும் உலகம் கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
