இஸ்லாமாபாத்தில் தொடங்கும் அமெரிக்க -ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை! கோட்டை போல மாறிய நகரம்  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, ஏப்ரல் 11 முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தையை ஏற்று நடத்த பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பாதுகாப்பு அரணாக மாற்றப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள ‘ரெட் ஜோன்’ பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம், முக்கிய அரசு அலுவலகங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் ஹோட்டல்கள் அமைந்துள்ள இந்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நகரின் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author