சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான ஜின்காங், ஜுன் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாபுரியைச் சந்தித்துரையாடினார்.
ஜின்காங் அப்போது கூறுகையில், சீன-இலங்கை நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவைப் வலுப்படுத்தவும் விரிவாக்கவும் சீனா விரும்புகிறது. சீனா, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் இயன்றளவில் தொடர்ந்து உதவியளிக்கும் என்று தெரிவித்தார்.
சாபுரி கூறுகையில், கடன் பிரச்சினை தீர்வு, தற்காலிக இன்னல்களைச் சமாளிப்பது முதலியவை குறித்து சீனா இலங்கைக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றி வரும் இலங்கை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தைத் தொடர்ந்து முன்னேற்றும் என்று கூறினார்.
இச்சந்திப்பின் போது, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முக்கியமான சர்வதேச முன்மொழிவுகளின் அடிப்படையில், பிராந்திய மற்றும் உலகின் அமைதி, நிதானம் மற்றும் செழுமையைச் சீனா, மற்ற நாடுகளுடன் இணைந்து பேணிக்காக்கும் என்றும் ஜின்காங் தெரிவித்தார்.