வியன்னாவிலுள்ள உலக ஆளுகை நண்பர்கள் குழு தொடக்கம்

Estimated read time 1 min read

உலக ஆட்சிமுறைக்கான முன்மொழிவு பற்றிய நிகழ்வு மற்றும் வியன்னாவிலுள்ள உலக ஆளுகை நண்பர்கள் குழுவின் தொடக்க விழா ஏப்ரல் 28ஆம் நாள் வியன்னாவில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் குழுவின் உருவாக்க நாடுகள் உள்ளிட்ட 40க்கும் மேலான நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகள், ஐ.நா தொழிற்துறை வளர்ச்சி அமைப்பின் பொது இயக்குநர், சர்வதேச வர்த்தகச் சட்டத்துக்கான ஐ.நாவின் ஆணையத்தின் பொதுச் செயலாளர், வேறு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச சிந்தனைக் கிடங்குகளின் நிபுணர்கள் உள்ளிட்ட சுமார் 130 பேர் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். வியன்னாவிலுள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் வேறு சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி லீ சொங் இந்நிகழ்வுக்குத் தலைமைத் தாங்கி உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், உறுப்பு நாடுகளுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது, வியன்னாவிலுள்ள உலக ஆளுகை நண்பர்கள் குழுவின் நோக்கமாகும். ஐ.நாவை வலுப்படுத்தி, மேலும் நேர்மையான மற்றும் நியாயமான உலக ஆட்சிமுறை அமைப்புமுறையின் உருவாக்கத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்றார்.

 

You May Also Like

More From Author