ஜெயிலர் 2 ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவிலா?  

Estimated read time 1 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவை சேர்ந்த பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய விநியோகஸ்தர் தனது சமூக ஊடகப் பதிவில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாக மறைமுகமாக குறிப்பிட்டதை தொடர்ந்து இந்த வதந்திகள் தீவிரமடைந்துள்ளன.
ஏற்கனவே நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அங்கு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள தமிழ் ரசிகர்களின் பேராதரவைக் கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author