மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 இடங்களிலும், ராஜஸ்தானில் 13 இடங்களிலும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 8 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 6 இடங்களிலும், அசாம் மற்றும் பீகாரில் தலா 5 இடங்களிலும் வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது.
சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா மூன்று இடங்களிலும், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா ஒரு இடத்திலும் இன்று வாக்குபதிவு நடைபெறுகிறது.