“2030க்குள் 33% மின் பேருந்துகள்”- மு.க.ஸ்டாலின்

Estimated read time 0 min read

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 4வது மாநாட்டை நடத்துகிறோம் என தமிழ்நாடு கால நிலை உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழ்நாடு கால நிலை உச்சி மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 4வது மாநாட்டை நடத்துகிறோம். காலநிலை மாற்றம் விவகாரத்தில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.

இதன் மூலம் சுப்ரியா சாகுவிற்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது. சுற்றுச்சூழல் துறையில் தமிழகத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சென்னையில் 380 மின் பேருந்துகள் உள்ளன.

தமிழகத்தில் 2030க்குள் 33% மின் பேருந்துகளை மின் பேருந்துகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் வாகனங்களுக்கு 2027 வரை சாலை வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளோம்.

இனிவரும் காலங்களில் அனைத்து துறைகளின் திட்டங்களும் காலநிலை நடவடிக்கையோடு இயைந்து செயல்படும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும். தமிழ்நாட்டின் கார்பன் உமிழ்வுகளை குறைக்க 2030க்குள் செயல்படுத்தக்கூடிய திட்டம் தயாரிக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் நடவு செய்ய 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும். தொழிற்சாலைகளும் அரசு நிறுவனங்களும் இணைந்து பசுமை தொழில்நுட்பங்களில் முதலீடுகள் செய்து கார்பன் உமிழ்வுகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உள்ளாட்சி அமைப்புகள் காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவம் அறிந்து செயலாற்றவும், காலநிலை தலைவர்களாகவும் துவர்களாகவும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

You May Also Like

More From Author