சீன வணிக அமைச்சகம் ஆக்டோபர் 10ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 136வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி அக்டோபர் 15 முதல் நவம்பர் 4ஆம் நாள் வரை குவாங்சோ நகரில் நடைபெறவுள்ளது.
நடப்புப் பொருட்காட்சியின் மொத்த நிலப்பரப்பு 15 லட்சத்து 50 ஆயிரம் சதூர மீட்டராகும். 55 பொதுவான அரங்குகள் மற்றும் 171 சிறப்பு அரங்குகளில் மொத்தம் 74 ஆயிரம் காட்சியிடங்கள் அமைக்கப்படும்.
30 ஆயிரத்துக்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் நேரடியாக கலந்து கொள்ளவுள்ளன. அவற்றில் சுமார் 4600 தொழில் நிறுவனங்கள் முதன்முறையாக கலந்து கொள்ளவுள்ளன.
11 லட்சத்து 50 ஆயிரம் புதிய உற்பத்திப் பொருட்கள், 10 லட்சத்து 40 ஆயிரம் பசுமை உற்பத்திப் பொருட்கள், தற்சார்பு அறிவுசார் சொத்துரிமை கொண்ட 11 லட்சத்து 10 ஆயிரம் பொருட்கள் ஆகியவை நடப்புப் பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக மையத்தின் இயக்குநர் ச்சூ ஷிஜியா தெரிவித்தார்.