மே முதல் நாள், மிகவும் பின்தாங்கிய நாடுகள் அல்லாத சீனாவுடன் தூதாண்மையுறவை நிறுவிய 20 ஆப்பிரிக்க நாடுகளின் மீது 2 ஆண்டுகால சுங்க வரி விலக்குக் கொள்கையைச் சீனா மேற்கொள்ளத் துவங்கியது. இதனுடன், தூதாண்மையுறவு நிறுவிய 53 ஆப்பிரிக்க நாடுகள் மீது பன்முகமான சுங்க வரி விலக்கு கொள்கை நனவாக்கப்பட்டுள்ளது. இது சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் மேலதிக வர்த்தக வாய்ப்புகளைக் கொண்டு வருவதோடு, ஆப்பிரிக்க தொழில் நிறுவனங்களுக்கும் பரந்துபட்ட வாய்ப்புகளையும் ஆப்பிரிக்காவின் நனவீனமயமாக்கலுக்கு வலுவான உந்து ஆற்றலையும் கொண்டு வரும் என்று கானா-சீன வணிக சங்கத்தின் தலைவர் அப்பேன் செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.
மே முதல் நாள் நடைமுறைக்கு வந்த சுங்க வரி விலக்கு கொள்கை ஆப்பிரிக்காவுக்கு என்னென்ன கொண்டு வரும்? முதலில், இடர்பாடு மற்றும் அறைக்கூவல்களை ஆப்பிரிக்கா சமாளிப்பதற்கு பாதுகாப்பு வழங்கப்படும். அது மட்டுமல்லாமல், இக்கொள்கை ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியையும் விரைவுபடுத்தும். சீனா மற்றும் உலக வர்த்தகத்தைப் பொறுத்தவரையும், சுங்க வரி விலக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும். ஆப்பிரிக்காவின் மேலதிக தரமான பொருட்கள் மேலும் மலிவான விலையில் சீன மக்களின் அன்றாட வாழ்க்கையில் நுழைய முடியும்.
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பின் புதிய அதியாயத்தையும் இது திறந்து வைத்துள்ளது. அதோடு, உலக பொருளாதாரத்துக்கு நம்பிக்கை மற்றும் உந்து ஆற்றலையும் கொண்டு வரும்.
