கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

Estimated read time 0 min read

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவையொட்டி, யாக சாலையில் நடைபெற்ற பூர்ணாகுதி பூஜைக்காக ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை மற்றும் 10 ஆயிரம் ஐம்பொன் நாணயங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை நடைபெற்ற யாகசாலை பூஜையில், பக்தர் ஒருவர் வழங்கிய 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை மற்றும் 10 ஆயிரம் ஐம்பொன் நாணயங்கள் யாகத்தில் இடப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. சென்னை ஸ்ரீ முத்தாரம்மன் குரூப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவக்குமார் இந்த காணிக்கையை வழங்கியுள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author