எதிர்பாராத அரசியல் திருப்பமாக, பில்லியனர் தொழில்முனைவோர் எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசியல் பாரம்பரிய குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு மாற்றாக வாக்களித்த பயனர்களின் பெரும் ஆதரவைத் தொடர்ந்து, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் சமூக வலைதளம் மூலம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
எலான் மஸ்க் ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினத்தன்று இதற்கான யோசனையை முதலில் வெளியிட்டார்.
இதுகுறித்து அப்போது வெளியிட்ட எக்ஸ் பதிவில், அமெரிக்கா கட்சி தொடங்க வேண்டுமா என கேட்டு நடத்திய சர்வேயில் 65 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அமெரிக்கா கட்சியைத் தொடங்கியதாக எலான் மஸ்க் அறிவிப்பு
