தொழில்துறை அடிப்படைத் திறனை மேம்படுத்துவதற்கான 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம் வெளியீடு

தொழில்துறை அடிப்படைத் திறனை மேம்படுத்துவதற்கான 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை சீனத் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்ளிட்ட எட்டுத் துறைகள் அண்மையில் வெளியிட்டன.

2030ஆம் ஆண்டிற்குள் தொழில்துறை அடிப்படைப் பலவீனங்களைக் குறைக்கவும், தொழில்நுட்பப் புத்தாக்கம், தனியாகக் கட்டுப்படுத்தக்கூடிய திறன், உயர்தரத் தயாரிப்புகளின் விநியோகம் ஆகியவற்றை முன்னெடுக்கவும், அடிப்படைத் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தவும் வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. மேலும், மேம்பட்ட உற்பத்தித் தொழிலை மையமாகக் கொண்ட நவீனத் தொழில்துறை அமைப்பை உருவாக்குவதற்கு வலுவான ஆதரவை வழங்கும் வகையில், தொழில்துறை அடிப்படைக்கான நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கும் செயல்முறையை மேம்படுத்தவும், தொழில்துறை அடிப்படைத் திறன் சர்வதேச அளவில் முன்னணி நிலையை அடையவும் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author