தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மீகக் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு இனி ஆன்லைன் முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆந்திர பக்தர்களிடம் சிறப்புத் தரிசனம் பெற்றுத் தருவதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் ஏமாற்ற முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இத்தகைய விரைவு தரிசன மோசடிகள் மற்றும் திருவிழாக் காலங்களில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஓரிரு மாதங்களில் இந்த புதிய ஆன்லைன் விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.
