சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், மக்கள் நீதி மன்றத்தின் பணிக்கு அண்மையில் முக்கிய உத்தரவிட்டார். அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இதுவரை, பல்வேறு நிலைகளிலான மக்கள் நீதி மன்றங்கள் கடப்பாடுகளை சீராக நிறைவேற்றி, சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கு வலிமைமிக்க நீதி சட்ட உத்தரவாதத்தை வழங்கியுள்ளன என்றார்.
மேலும், புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சட்ட ஆட்சி சிந்தனையைப் பன்முகங்களிலும் பின்பற்றி, கட்சியின் தலைமையிலும், மக்களே முதன்மை என்ற கருத்திலும் ஊன்றி நிற்க வேண்டும் என்றும், நியாயமான, திறன்மிக்க மற்றும் அதிகாரப்பூர்வமான சோஷலிச நீதி சட்ட அமைப்பு முறையின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தி, உயர்தர நீதி சட்டத்தின் மூலம் உயர்தர வளர்ச்சி மற்றும் உயர்நிலை பாதுகாப்பை உத்தரவாதம் செய்து, மேலும் உயர்நிலையிலான பாதுகாப்பான சீனா மற்றும் சட்ட ஆட்சி முறையிலான சீனாவைக் கட்டியமைப்பதற்கும், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கும் புதிய பங்காற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
