ஹாங்காங்கில் உலக கடல்சார் வணிகர்கள் மன்றக் கூட்டம் துவக்கம்

Estimated read time 0 min read

2026 உலக கடல்சார் வணிகர்கள் மன்றக் கூட்டம் நவம்பர் 16ஆம் நாள் ஹாங்காங்கில் துவங்கியது.

உலகளாவிய கடல்வழி போக்குவரத்து அமைப்புமுறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான புதிய பாதைகளை கூட்டாக ஆராயும் வகையில், கப்பல் போக்குவரத்து, துறைமுகம், வர்த்தகம், நிதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறையினர்கள் இதில் ஒன்றுகூடியுள்ளனர்.

இக்கூட்டத்தில், ஹாய்நான் மாநிலத்தின் யாங்பு துறைமுகத்துடன் கூட்டாளி உறவையும், குவாங்டோங் மாநிலத்தின் ட்சான்ஜியாங்குடன் முதலாவது பசுமை எரியாற்றல் பாதையையும் கிரேக்கத்தின் பிரேயஸ் துறைமுகத்துடன் முதலாவது பசுமையான கப்பல் போக்குவரத்து வழித்தடம் மற்றும் கூட்டாளி உறவையும் ஹாங்காங் நிறுவியுள்ளது.

2026 ஹாங்காங் கப்பல் போக்குவரத்து வாரத்தின் முதன்மை நிகழ்வான இம்மன்றக் கூட்டத்தின் போது, ஹாங்காங், ஷென்சென், ஷாங்காய் ஆகிய 3 இடங்களில் 16 முதல் 18ஆம் நாள் வரை குறிப்பிட்ட கருப்பொருட்களிலான கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author