இணைய மேடையிலிருந்து கிடைத்த தரவுகளின்படி, மே 5ஆம் நாள் வரை, 2026ஆம் ஆண்டு சீனாவில் திரைப்படங்களின் மொத்த வசூல் 1360கோடி யுவானைத் தாண்டியுள்ளது. மே தின விடுமுறைக் காலத்தில் திரைப்பட வசூல் 70கோடி யுவானை எட்டியுள்ளது. திரைப்படங்களின் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 1கோடியே 92லட்சமாகி கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, தாண்டியுள்ளது. இவ்வாண்டின் மே தின விடுமுறைக் காலத்தில் திரைப்படங்களின் வெளியீட்டு எண்ணிக்கை மேலும் அதிகம். நுழைவுச்சீட்டு விலையும் மேலும் மலிவாக இருக்கும். விடுமுறையின் முதல் நாளில் சீனாவில் திரைப்பட நுழைவுச்சீட்டுகளின் சராசரி விலை 36.8யுவானாகும். கடந்த 4 ஆண்டுகளின் இதே காலத்தில் இருந்ததை விட, மிக மலிவான விலை இதுவாகும். பெய்ஜிங், ஹெபெய், அன்ஹூய், குவாங்சி முதலிய இடங்கள், திரைப்பட பார்வைக்கான சிறப்பு சலுகை நடவடிக்கைகளை அடுத்தடுத்து வழங்கி திரைப்பட சந்தையை முன்னெடுக்க உதவியளித்துள்ளன. இந்த சலுகை நடவடிக்கைகள் பெரும்பாலான நுகர்வோர்களின் தேவையை நிறைவு செய்து திரைப்பட பார்வை மேலதிக மக்களின் பொழுதுபோக்காக மாறச் செய்துள்ளன.
மே தின விடுமுறையில் 70கோடி யுவான் தாண்டிய சீன திரைப்படங்களின் மொத்த வசூல்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
கற்பனை வரங்கள்
June 15, 2024
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
April 19, 2026
