திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Estimated read time 0 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புகழ்பெற்ற இக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், விடுமுறை நாளான இன்று கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

You May Also Like

More From Author