திமுக ஆட்சிக்கு வேட்டு வைப்பதை பார்க்கத்தான் போகிறீர்கள் – தமிழிசை சவுந்தரராஜன்..!

Estimated read time 1 min read

திமுகவுக்கு ஷாக் கொடுப்பார் ஷா என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

தமிழக அரசியலில் “ஷா ” விற்கும் திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.???.. அப்போதைய கவர்னர் கே கே ஷா வால். திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட்டது. அந்த ஷாவை போல அமித் ஷாவும் திமுகவை வீட்டுக்கு அனுப்புவார். 1976 ஐ போல ஒரு ஷாக்கை கொடுக்க ஒரு ஷா 2026 இல் வருகிறார்.. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கருப்பு சிவப்பு படையை எதிர்கொள்ள காவிப்படை தயாராகவே இருக்கிறது.தமிழகம் என்றுமே ஆணவம் பிடித்த தலைமைக்கு தலைவணங்கியது கிடையாது..திருப்பரங்குன்றத்தில். இந்து தர்மத்தை ஆணவத்தோடு அதிகார மமதையில் அடக்க நினைக்கிறீர்கள். தீபாவளிக்கு நீங்கள் வாழ்த்துகள் கூட சொல்வதில்லை ஆனால் உலகம் முழுவதும் இந்து பண்டிகையான தீபாவளிக்கான கொண்டாட்டத்தை #யுனெஸ்கோ அங்கீகரித்து இருக்கிறது. ஆக இந்து தர்மத்தை பொருத்தமட்டில் நீங்கள் தடுக்க நினைப்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது. ஆக எல்லாம் தங்களுக்குத்தான் out of control ஆகி வருகிறது. உங்கள் வாக்குச்சாவடிகள் வெற்று வாக்கு சாவடிகளாக மாறி.. திமுக ஆட்சிக்கு வேட்டு வைப்பதை பார்க்கத்தான் போகிறீர்கள் என அதில் பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author