ஷி ச்சின்பிங்—புதின் சந்திப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினை 18ஆம் நாள் சென்சேன் நகரில் சந்தித்து பேசினார்.

இதில், இவ்வாண்டு சீன-ரஷிய நெடுநோக்கு ஒருங்கிணைப்புக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவாகவும், சீன-ரஷிய அண்டை நாட்டு நட்பு ஒத்தழைப்பு உடன்படிக்கை உருவாக்கப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகவும் உள்ளது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார். சீனா மற்றும் ரஷியாவின் வளர்ச்சி ஆசிய-பசிபிக் பிராந்திய வளர்ச்சியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், ரஷியா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் குடும்பத்துடன் இணைந்து இப்பிராந்தியத்தின் செழுமை மற்றும் வளர்ச்சிக்காக முயற்சிகளை மேற்கொண்டு ஆசிய-பசிபிக் பொதுச் சமூகத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

புதின் கூறுகையில், நடப்பாண்டில் அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் 4 முறை பயன் தரும் சந்திப்புகளை நடத்தியுள்ளேன். சீனாவுடன் இணைந்து அனுபவங்களைத் தொகுத்து எதிர்காலத்திட்டத்தை வரைந்து, வர்த்தகம், எரியாற்றல், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கி,  மனித தொடர்பு பரிமாற்றத்தை அதிகரிக்க ரஷியா விரும்புகின்றது என்று கூறினார். இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளை வழங்கப் பாடுபட வேண்டும் என்றும் புதின் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author