ஷென்செனில் ஏபெக் 33ஆவது தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களை வரவேற்கும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் அவரது மனைவி பெங்லியுவானும் நவம்பர் 18ஆம் நாளிரவு ஷென்சென் சர்வதேச பரிமாற்ற மையத்தில் விருந்து வழங்கினர்.
இதில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வரவேற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்,
திறப்பானது ஷென்சேன் நகரத்தின் தனிச்சிறப்பாகும். இது நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊரிலிருந்து சர்வதேச மயமாக்க நகரமாக மாறியுள்ளது. இன்று உலகெங்குள்ள பிரதேசங்களுடன் வர்த்தகம் மேற்கொண்ட ஷென்சேன் நகரம் உயரத்தர வெளிநாட்டுத் திறப்புக்கான சீனாவின் ஜன்னலாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
தற்போது ஷென்சேன் நகரத்தில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் சர்வதேசக் காப்புரிமைகள் விண்ணப்பம் செய்யப்படுகின்றன. சீனாவில் புத்தாக்கத்
தொழில் நிறுவனங்கள் குழுமி இருக்கும் இடமாக இது திகழ்கின்றது. ஷென்சேனின் கதை ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பின் வெற்றிக்கான முன் மாதிரியாகவும் உள்ளது என்று கூறிய ஷி ச்சின்பிங், வரும் கூட்டத்தில் ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு பற்றி கலந்தாராய்ந்து இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்குக் கூட்டாகப் பாடுபட விரும்புவதாகத் தெரவித்தார்.
