தென் கொரியாவின் அரசுத் தலைவருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 1 min read

 

ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் சீனாவுக்கு வந்துள்ள தென் கொரியாவின் அரசுத் தலைவர் லீ ஜே-ம்யுங்குடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 18ஆம் நாள் ஷென்சென் மாநகரில் சந்திப்பு நடத்தினார்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், இருநாடுகள் உண்மையான பலதரப்புவாதத்தை கூட்டாக செயல்படுத்தவும், ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பொது சமூகம் மற்றும் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் தாராள வர்த்தக மண்டலத்தின் கட்டுமானத்தை முன்னெடுக்கவும், உலகளாவிய தொழில் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் நிலைத்தன்மையையும் சீரான செயல்பாட்டையும் பேணிக்காக்கவும், மேலும் நீதியான மற்றும் நியாயமான உலகளாவிய ஆளுகை அமைப்பின் கட்டுமானத்தை ஊக்குவிக்கவும் வேண்டும் என்றார்.

லீ ஜே-ம்யுங் கூறுகையில், அடுத்த ஆண்டு தென் கொரிய-சீன தூதாண்மையுறவு நிறுவப்பட்டதன் 35வது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, மேலும் சிறந்த தென் கொரிய-சீன உத்திநோக்கு கூட்டாளியுறவை உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும், கூட்டு செழுமையைக் கொண்ட ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பொது சமூகத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க சீனாவுடன் பணியாற்ற விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author