சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 20ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு இலட்சத்து ஆயிரத்து 503.6 பில்லியன் யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் சீனப் பொருளாதாரம் நிதானமாக முன்னேறி வருகிறது. உயர் தர வளர்ச்சி ஆக்கப்பூர்வமாக பயனளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
தொழில்துறையின் அதிகரிப்பு மதிப்பு 5 இலட்சத்து 80 ஆயிரத்து 610 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.8 விழுக்காடு அதிகரித்தது.
வேளாண் தொழில்துறையின் அதிகரிப்பு மதிப்பு 36 இலட்சத்து 40 ஆயிரத்து 200 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகரித்தது.
மூன்றாம் நிலை துறைகளின் அதிகரிப்பு மதிப்பு 59 இலட்சத்து 29 ஆயிரத்து 550 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.4 விழுக்காடு அதிகரித்தது.
