கனடா தலைமை அமைச்சர்-சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

Estimated read time 1 min read

கனடா நாட்டின் தலைமை அமைச்சர் கார்னி 29ஆம் நாள் ஓட்டாவா நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயைச் சந்தித்துரையாடினார்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் வணக்கத்தை வாங் யீ கானிக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கார்னியின் சீன பயணம், இரு நாட்டுறவின் வளர்ச்சிப் பாதையை சரிப்படுத்தியது. சீனா-கனடா புதிய ரக நெடுநோக்கு கூட்டாளியுறவைக் கட்டியமைப்பதை இரு நாட்டு தலைவர்கள் உறுதிப்படுத்தினர். இரு நாட்டுறவு வளர்ச்சிக்கு இது வழிகாட்டியது. சீனா-கனடா உறவின் மீட்சி, இரு நாட்டு நலனுக்கும் பல்வேறு தரப்புகளின் எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது. கனடாவின் சரியான தேர்வு இதுவே ஆகும். இரு நாடுகளுக்கிடையில் மோதல் இல்லை. ஒத்துழைப்பு வாய்ப்பு அதிகம். சீனா, கனடாவுடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, தொடர்பை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்கி இரு நாட்டுறவின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகின்றது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author