SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!”

Estimated read time 1 min read

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்பில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (நவம்பர் 19) வியாழக்கிழமை அன்று எஸ்பிஐ யுபிஐ சேவைகள் 45 நிமிடங்ம்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1:15 மணி முதல் 2:00 மணி வரை இந்தச் சேவைத் தடை அமலில் இருக்கும் என்று வங்கி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. எனினும், பராமரிப்புப் பணிகள் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிவடையவும் வாய்ப்புள்ளது.

இந்தக் குறிப்பிட்ட 45 நிமிட நேரத்தில் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் வழியாக எஸ்பிஐ வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற வழக்கமான பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது அவசரப் பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், தடையற்ற பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் யுபிஐ லைட் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வங்கி குறிப்பிட்டுள்ளது.

“>

இந்தத் தற்காலிகச் சேவைத் தடையால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author