ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு 1.25 கோடி ஊக்கத்தொகை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Estimated read time 1 min read

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கங்களை வென்றுள்ள தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு அரசு சார்பில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் மானசி ஜோஷி – தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

இதுதவிர, மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், நிதீஷ் குமாருடன் இணைந்த கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டு பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவ்வணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

துளசிமதி முருகேசனின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுவரை மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author