ச்சிங்காய்-சிசாங் ரயில் பாதை இயக்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு

2026ஆம் ஆண்டின் ஜுலை 1ஆம் நாள், ச்சிங்காய்-சிசாங் ரயில் பாதையின் இயக்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவாகும். பீடபூமியில் அமைந்துள்ள இந்த உலகில் மிக உயரமான மிக நீளமான ரயில் பாதையானது, வானத்தில் பாதை என பெருமையாக அழைக்கப்படுகிறது. இது, உலக பொறியியல் வரலாற்றில் ஒரு அற்புதம் மட்டுமல்லாமல், பீடபூமி பகுதியின் செழிப்பையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் முக்கிய பொருளாதார ஆதரவாகவும் திகழ்கின்றது.

1956 கிலோமீட்டர் நீளமுள்ள ச்சிங்காய்-சிசாங் ரயில் பாதை இயங்கத் தொடங்கிய பிறகு, முந்தைய சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும்போது, சரக்கு போக்குவரத்து செலவு சுமார் மூன்றில் இரண்டு பங்கு குறைந்தது. இதன் மூலம், உள்ளூர் பீடபூமியிலுள்ள சிறப்பு பொருட்களை சீனாவில் மற்ற இடங்களுக்கும் சர்வதேச சந்தைகளுக்கும் அதிகளவில் கொண்டு செல்ல முடிகிறது. அதே வேளையில், சீனாவில் மற்ற இடங்களைச் சேர்ந்த தயாரிப்புகளும் பீடபூமி பகுதிக்குத் தடையின்றி அனுப்பப்படு வருகின்றன. இது பொருட்களின் விலைகளைப் பெருமளவில் குறைத்து, உள்ளூர் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author