முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக வரும் 28-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முல்லை பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிப்பது தொடர்பாகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கடந்த ஜனவரி மாதத்தில் கேரள அரசு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
அதில், 128 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள அணை உடைந்ததால் கேரளாவில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், புதிய அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் அளிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான முன்மொழிகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு வரும் மே 28-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பட்டியலிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.