கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் அல்லது சிறப்பு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் தனியார் மருத்துவமனைகள் மாவட்ட இணை பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும், கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு கட்டணமோ அல்லது கூடுதல் கட்டணமோ வசூலிக்கக் கூடாது, வீரியம் இல்லாத கொரோனாவிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.