சீன-ஐரோப்பிய ஒன்றிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஐரோப்பிய பேரவை தலைவர் கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் செயற்குழு தலைவர் வொன்டர்லெயின் அம்மையார் முதலியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தியில் கூறுகையில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும், பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாகவும், பலதுருவமயமாக்கத்தை முன்னெடுக்கும் இரு சக்திகளாகவும் விளங்குகின்றன.
இரு தரப்பின் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில், பல்நிலை மற்றும் பல்வேறு துறைகளில் இரு தரப்புகள் செழுமையான ஒத்துழைப்பு சாதனைகளைப் பெற்றுள்ளன. சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவு, உலகளவில் மிக அதிக செல்வாக்கு வாய்ந்த இரு தரப்பு உறவுகளில் ஒன்றாகும்.
இரு தரப்பும், பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, உலகளாவிய சவால்களைக் கூட்டாகச் சமாளித்து, உலக அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமைக்கு மேலதிக பங்கு ஆற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
