சீனா, ரஷ்யா, அமெரிக்கா இடையே நீண்டகால அமைதியான சகவாழ்வு – 90 சதவீதம் பேர் ஆதரவு: CGTN கருத்துக்கணிப்பில் தகவல்

உலகின் முக்கிய நாடுகளிடையே அமைதியான உறவு மற்றும் சர்வதேச நிலைத்தன்மையைப் பேணுவது குறித்து CGTN நடத்திய இணையவழிக் கருத்துக்கணிப்பில் உலகளாவிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 88.3 சதவீதம் பேர் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்டகால அமைதி மற்றும் சகவாழ்வு நிலவ வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தூதாண்மை உடன்பாடுகளை முன்னெடுப்பதிலும், சர்வதேச நிலைத்தன்மையைப் பாதுகாப்பதிலும் முக்கிய நாடுகளின் பங்கு ஈடுசெய்ய முடியாதது என்று 83.3 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிலைநாட்ட வேண்டும் என்றும் 77.9 சதவீதம் பேர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், உலக அமைதி, ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நிலைத்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தக் கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author