2026 ஏபெக் தலைவர்களின் ஷென்சேன் முன்னோக்கு

33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் 19ஆம் நாள் 2026 ஏபெக் தலைவர்களின் ஷென்சேன் முன்னோக்கு என்ற ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது பொருளாதார மற்றும் வர்த்தகம், பிணைப்பு, புத்தாக்கம், வளர்ச்சி ஆகிய 4 முன்னுரிமைத் துறைகள் பற்றியும் ஆசிய-பசிபிக் தாளார வர்த்தக மண்டலம், வசதிகளின் கனரக இணைப்பு, விதிகள் மற்றும் அமைப்புமுறைகளின் மென்ரக இணைப்பு, மக்களுக்கிடையிலான பரிமாற்றம், எண்ணியல் பொருளாதாரம், புதிய தொழில் நுட்பங்கள், திறமைக் கட்டுமானம், நீடித்த வளர்ச்சி ஆகிய 8 திசைகள் பற்றியும் விவரிக்கின்றது. இதில் ஆசிய-பசிபிக் பொதுச் சமூகத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும் என்று பல்வேறு உறுப்புப் பொருளாதாரங்கள் மீண்டும் உறுதி செய்துள்ளன.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோ ஜியாகுன் 20ஆம் நாள் கூறுகையில், இந்த ஆவணம் ஏபெக்கின் சீன ஆண்டின் மிக முக்கிய சாதனையாக உள்ளது என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author