தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி..!!

Estimated read time 1 min read

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இன்று (திங்கட்கிழமை) முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்கிடையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி சென்னை மயிலாப்பூர் பாஜக வேட்பாளரை ஆதரித்து வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். மேலும் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளார். அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் கோவை பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி விரைவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

You May Also Like

More From Author