தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கையும் ஆதரவும் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வறுமை வேகமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், 2011 முதல் 2023-ஆம் ஆண்டு வரை 49 கோடியே 60 லட்சம் பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வறுமை விகிதம் 27.1 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2017 முதல் 2023 வரை 13 கோடியே 40 லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், கிராமப்புற பெண்கள் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தொடர் முயற்சிகளே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
