12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு; பிரதமர் மோடி

Estimated read time 0 min read

காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை எழுப்பி வந்த நிலையில், வெறும் 12 ஆண்டுகளில் 50 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

பீகார் மாநிலம் வைஷாலியில் 34 ஆயிரத்து 470 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, வறுமை ஒழிப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில், வெறும் 12 ஆண்டுகளில் 50 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கியுள்ளதாகவும், லட்சக்கணக்கான குடும்பங்களுக்குச் சொந்தமாக நிரந்தர வீடுகளைக் கட்டிக் கொடுத்து, அவர்களின் வாழ்வில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இவ்வளவு பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்தை ஒரு கேமராவால் முழுமையாகப் படம் பிடித்துவிட முடியும் என்று தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்தப் பெருந்திரளான மக்கள் கூட்டமே, வளர்ச்சியின் மீதான மக்களின் விழிப்புணர்வும், அர்ப்பணிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கான நேரடி சான்றாகத் திகழ்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author