அரசியலில் இருந்து விலகிய வி.கே. பாண்டியன்!

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமான வி.கே. பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைப் பூர்விகமாக கொண்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசாவில் பணியாற்றிய காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டார்.

இதனால் அவர் விருப்ப ஓய்வு பெற்று, பிஜு ஜனதா தளத்தில் இணைந்து செயல்பட்டார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும், ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததோடு ஆட்சியையும் இழந்தது.

இதைத்தொடர்ந்து வி.கே. பாண்டியன் மீது பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

தன்னால் பிஜு ஜனதா தள கட்சிக்கு இழப்பு ஏற்பட்டிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் வி.கே. பாண்டியன் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author