ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசை : 3-வது இடத்தை தக்க வைத்த இந்தியா!

Estimated read time 0 min read

ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், சிறந்த தலைவர்களுக்கான பட்டியலில் பிரதமர் மோடி 2வது இடத்தில் உள்ளார்.

2026 ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசையை ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ளது. இந்தியா 40.5 புள்ளிகளுடன் தொடர்ந்து 3வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய அளவில் இந்தியாவின் ராஜதந்திர செல்வாக்கு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை அதிகரித்ததே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.

பொருளாதாரத் திறனில் சிறிய சரிவு ஏற்பட்டாலும் இந்தியா ஒரு பெரும் சக்தியாகத் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்தது இந்தியாவின் பாதுகாப்பு நெட்வொர்க் மதிப்பெண்ணை வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆசியாவின் இரண்டாவது மிகத் திறமையான பிராந்தியத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author