உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த அனுமதி, ஜனவரி 9, 2015 க்கு முன் வந்து அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்தவர்களுக்குப் பொருந்தும்.
நீண்டகால உள்நாட்டுப் போர் காரணமாக ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் உயிர் மற்றும் வாழ்வாதாரம் தேடி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.
அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு, அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
2015க்கு முன்பு வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி
