உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு, தற்போது 62 வயதாகும் நிலையில், வாரிசுகளுக்கு வழிவிடும் வகையில், அடுத்த 8 ஆண்டுகளில் படிப்படியாக ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ப்ளூம்பெர்க்கில் வெளியான ஒரு அறிக்கையின்படி, அதானி 70 வயதில் பதவி விலக திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் அதானி தனது வாரிசு திட்டத்தைப் பற்றி அதில் அளித்த பேட்டியில், வணிக நிலைத்தன்மைக்கு வாரிசுகளுக்கு நிர்வாகம் கைமாற்றப்படுவது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாற்றம் இயற்கையானதாக எந்தவித சிக்கலும் இல்லாமல் நடைபெற வேண்டும் என விரும்புவதால், இதற்கான தேர்வை தனது வாரிசுகளிடமே விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டாப் பணக்காரர் அதானி ஓய்வு பெற முடிவு; அடுத்த வாரிசு யார்?
You May Also Like
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைவு
October 13, 2025
குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!
July 5, 2025
