மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு… திருப்பரங்குன்றம் மலைக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது..!

Estimated read time 0 min read

மதுரை மாவட்டம் முழுவதும் (நவ.23) இரவு 9 மணி முதல் நவம்பர் 25ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது ஏறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய உத்தரவு :

திருப்பரங்குன்றம் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் ஆதரவாகவும், எதிராகவும் திரள வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மதுரை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இரு தரப்பினரும் அதிக அளவில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மக்களின் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் பொது சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்:

* மதுரை மாவட்ட எல்லைக்குள் எந்தவிதமான பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் அல்லது பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

* திருப்பரங்குன்றம் மலையில் பொதுமக்கள் ஏறிச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

* பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

*தடை உத்தரவு நவம்பர் 23ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25ம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும்.தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவை:

*உரிய அதிகாரியிடம் அனுமதி பெற்று நிபந்தனைகளுடன் நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்.

* விளையாட்டுப் போட்டிகளுக்காக நடைபெறும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகள்.

* மதச் சடங்குகள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள்.

* திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கோவில் நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் நடைபெறும் வழக்கமான சடங்குகள் மற்றும் திருவிழாக்கள்.

* சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* மாநில மற்றும் மத்திய அரசுகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள்.உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள வழக்கமான மத வழிபாடுகள் மற்றும் தர்கா உள்ளிட்ட நிறுவனங்களின் சட்டப்பூர்வமான செயல்பாடுகளுக்கும், காவல்துறையின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நவ. 23ம் தேதி இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்து, நவ. 25ம் தேதி காலை 10 மணி வரை நடைமுறையில் இருக்கும். முன்னதாக திரும்ப பெறப்படாவிட்டால், குறிப்பிட்ட காலம் வரை இந்த உத்தரவு தொடரும்.

இவ்வாறு தடை உத்தரவில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா கூறி உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author