உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

Estimated read time 0 min read

நீதிமன்ற உத்தரவுக்கு முரணான ஆலோசனைகளை யார் வழங்கினாலும் அவற்றை மாவட்ட ஆட்சியர் புறக்கணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

மதுரையில் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை மட்டுமே காரணமாக கூறி ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது என தெரிவித்தனர்.

இந்திய எல்லைக்குட்பட்ட அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்திற்கு உதவியாகச் செயல்பட வேண்டும் எனவும்

மாவட்ட ஆட்சியர் ஒரு சிவில் அதிகாரி என்பதால், இந்தப் பிரிவு அவருக்கும் முழுமையாகப் பொருந்தும் எனவும் சுட்டிக்காட்டினர்.

கடந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழா தொடர்பான நீதிமன்ற உத்தரவு அதிகாரிகளால் வெளிப்படையாக மீறப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்திற்கே பதிலளிக்க கடமைப்பட்டார் என்பதை நினைவூட்டிய நீதிபதிகள்,

நீதிமன்ற உத்தரவுக்கு முரணான ஆலோசனைகள் வேறு எந்த அதிகாரியிடமிருந்து வழங்கப்பட்டாலும் அவற்றை மாவட்ட ஆட்சியர் புறக்கணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவையும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவையும் மீறி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

Please follow and like us:

You May Also Like

More From Author