மெக்சிகோ வளைகுடாவில் ஒரு சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில், இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். பல மணி நேர தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் விமானத்தின் சிதைவுகளிலிருந்து அவர்களது உடல்களை மீட்டனர்.
அமெரிக்காவின் மிசிசிபி கடற்கரைக்கு அப்பால் ஹார்ன் தீவுப் பகுதிக்கு அருகே சிறிய ரக விமான விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர். 8,800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு படையினர் விரைந்தனர்.
4 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. ”ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்” என அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
