திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தவெக அரசு கடமை தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு பின்பற்றியிருக்க வேண்டும் என தெரிவித்தார். உச்சநீதிமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரவை அவமதித்ததால் தவெக அரசு அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.
