சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பின் போது, அமெரிக்கா “தைவான் சுதந்திரம்” என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரிக்கவில்லை என்பதை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். இது குறித்து சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகம் 25ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் செய்தித் தொடர்பாளர் ஜாங் ஹான் கூறுகையில்,
உலகில் ஒரே ஒரு சீனா உள்ளது என்றும், தைவான் பிரதேசம் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும் என்றும் தெரிவித்தார். தைவான் விவகாரம் என்பது சீனாவின் மிக முக்கியமான நலன்களின் மையப்பகுதியாகும். இதுவும் சீன-அமெரிக்க உறவில் மிக முக்கியமான மற்றும் உணர்திறன் மிக்க விவகாரமாகும். தைவான் பிரச்சினையைச் சரியாக கையாள்வது, சீன-அமெரிக்க உறவின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனநாயக முன்னேற்ற கட்சியின் அதிகாரிகள் தற்போதைய நிலைமைகளைத் தெளிவாக அறிந்து, “தைவான் சுதந்திரம்” தொடர்பான அனைத்து பிரிவினைவாத செயல்களையும் நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
